திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் முனைவர்.ஆ. சுசிலா மேரி அவர்களுக்கு சாதனை சிகரம் பெண் சிற்பி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இவள் தாரகை இலக்கிய இதழ் பதிப்பகத்தின் நிறுவனர் சு.பரிமளா தேவி நடத்திய பெண் சிற்பிகள் -2 வெளியீடு, இவள் தாரகை 21 – வது இதழ் வெளியீடு, இவள் தாரகை விருதாளர்களுக்கு விருது என
முப்பெரும் விழா நிகழ்ச்சி ஆர்டிஓ ஆபீஸ் அருகில் திண்டுக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஜி.டி.என். தமிழ் துறை உதவி பேராசிரியர் வெ.முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாநகராட்சி முதல் பெண் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் திண்டுக்கல் மருத்துவர் ஜெ.அமலாதேவி, மருத்துவர். சம்பத்குமாரி , திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை மருத்துவர். செல்வராணி ,
இவள் தாரகை பெண்கள் இதழ் ஆசிரியர் சு.பரிமளா தேவி ஆகியோர் கலந்து கொண்டு
நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மகளிர் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தமைக்காக முனைவர்.ஆ.சுசிலாமேரி அவர்களுக்கு சாதனைச் சிகரம் பெண் சிற்பி என்ற விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்கள்.