மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நட்டாகுடி கிராமத்தில் சந்திரசேகர் ஷாலினி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். சந்திரசேகர் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன் பிறந்த ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையை கடந்த 22-05-2024 அன்று நடந்த வாக்கு வாதத்தில் இருவரும் அந்த குழந்தையை கீழே தூக்கி வீசி உள்ளனர் இதனால் அந்த குழந்தை திடீரென இறந்துள்ளது இந்த நிலையில் இருவரும் சேர்ந்து சந்திரசேகரின் தாயார் காளிமுத்து ஆகிய மூவரும் அந்தக் குழந்தையை நாட்டாகுடியில் ஓரிடத்தில் குழி தோண்டி புதைத்து உள்ளனர். இந்த தகவல் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டவுடன் அங்கு சென்ற காவல்துறையினர் புதைக்கப்பட்ட குழந்தையை எடுத்து உடற்கூறு ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டனர் அதன் பின்பு சந்திரசேகர் ஷாலினி சந்திரசேகர் தாயார் காளிமுத்து ஆகிய மூவரும் தலைமறைவாகிய நிலையில் மேற்படி குற்றவாளிகளை பிடிக்க தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஐஜி கண்ணன் ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை டிஐஜி துறை மற்றும் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மானாமதுரை கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவின் பேரில் திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் மூவரும் நட்டாக்குடி பகுதிக்கு வந்திருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற தனிப்படையினர் மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.