கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர் .
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தெரிவித்ததாவது:
கொத்தடிமைத் தொழிலாளர் முறை 1976 ஆம் வருடத்திய கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின்படி, 09.02.1976 முதல் ஒழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 9 ம் நாள் கொத்தடிதை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி 9 ம் நாளன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் அனுசரிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின்படி வலுக்கட்டாயமாக ஒருவரை தொழிலில் ஈடுபடுத்துவது கொத்தடிமை முறையாகும். முன்பணமாக பெற்ற கடன் மூலமாக ஒருவரை கட்டாய தொழிலுக்கு உட்படுத்துவது அல்லது வேறு சில ஜாதி மற்றும் சமூக கட்டுப்பாட்டின் மூலமாக அவர்களை வேலைக்கு கட்டுப்படுத்துவது, தொழிலாளர்களுக்கான உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறித்து தொழிலில் ஈடுபடுத்துவது ஆகியவை கொத்தடிமை முறைக்கு உட்பட்டவையாகும். இத்தகைய கொத்தடிமை தொழிலாளர் முறையை பின்பற்றும் உரிமையாளர்/வேலையளிப்பவர்களுக்கு கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/-வரையிலான அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒரு தொழிலாளர் பிரச்சனை மட்டுமல்லாமல் மனித உரிமை குற்றம் என்பதால் இதனை முற்றிலுமாக நீக்க அனைவரும் பாடுபட வேண்டும். 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதால் தொழிலாளர்களை பணிக்கு ஈடுபடுத்துபவர்கள் எவ்வகையிலும் தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்த மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும். தொழிலாளர்களும் உரிமையாளர்களிடம் கடன் பெற்று கொத்தடிமையாக பணிக்கு செல்வதில்லையென உறுதி ஏற்க வேண்டும். கொத்தடிமையாக தொழிலாளர்கள் யாரேனும் ஈடுபடுத்தப்படுவது அறிய வந்தால் மாவட்ட நிர்வாகம் அல்லது தொழிலாளர் துறை அலுவலர்கள் அல்லது காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் 61601 மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தெரிவித்தார்.இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைகுறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொ) .குமரன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதாராணி, தனி துணை ஆட்சியர் .பன்னீர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .பத்மலதா, வேளாண்மை இணை இயக்குநர் .பச்சையப்பன், தோட்டக்கலை துறை இணை இயக்குநர் .இந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .நடராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் .பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .கௌரிசங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .முருகேசன், மாவட்ட சுகாதார அலுவலர் .ரமேஷ் குமார், தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) .ஆர்.மாதேஸ்வரன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்பு) .ஜெய்சங்கர், துணை ஆய்வர் .ந.மாயவன், தேசிய ஆதிவாசி தோழமை கழகம் தன்னார்வ அமைப்பு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.