நாகர்கோவில் செப் 25
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அவசர அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான அரிதான இரத்த பிரிவு கிடைக்காமல் ஏற்பட்ட பதட்டத்தை நிவாரணம் செய்யும் வகையில் தன்னிச்சையாக இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்த தானம் செய்த கொடையாளிகளான சிவா, அஜித் குமார், அனீஸ் ஆகியோரின் மனிதநேயமிக்க செயலைை பாராட்டும் வகையில் சமூக சேவகர். மருத்துவர். தி .கோ. நாகேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் வந்து ரத்த தானம் செய்தவர்களை சந்தித்து அவர்களின் செயலுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இளைஞர்களின் இத்தகைய செயலை பாராட்டி மருத்துவர் நாகேந்திரன் கூறுகையில் இரத்ததானம் செய்பவர்கள் போற்றுதலுக்கு மட்டுமல்லாமல் வணக்கத்திற்கும் உரியவர்கள் காரணம் பல்வேறு கொடைகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம் அந்தக் கொடைகள் அனைத்தும் மனிதனின் வாழ்வாதாரத்தை மட்டுமே மேம்படுத்துவதாக இருக்கும். ஆனால் ரத்த தானம் என்பது ஒரு உயிரை மீட்டெடுக்கும் சக்தி கொண்ட உயிர் ஊட்டியாக உள்ளது. எனவே தான் தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்று கூறுகிறோம். ஆகவே அரியவகை ரத்தத்தை தானமாக கொடுக்க முன்வந்து ரத்த தானம் வழங்கிய இந்த இளைஞர்களிடம் உள்ள விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். உடன் வழக்கறிஞர் சேக் மைதீன், தினா இருந்தனர். இரத்ததான வங்கியின் நடைமுறைகளை பாலன் , லதா, சாந்தி செய்திருந்தனர். இரத்த தானத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செட்டிகுளம் பொறியாளர். ரெனின் , ஆசிரியை. பொன் .அனுஷா, அகஸ்டின் பிரபு ஆகியோர் செய்திருந்தனர். நோயாளின் பிள்ளைகளான ராஜன் மற்றும் ஷிபா ஆகியோர் இருந்தனர்