கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அத்திப்பாடி ஊராட்சியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அத்திப்பாடி நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களில் 18/6 என்ற சர்வே எண்ணில் தரிசு நிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது இவ்விடத்தில் தற்போது ஊரக வளர்ச்சித் துறையால் குட்டை வெட்டப்பட்டு சுமார் 50 வருட காலமாக நீர்த்தேக்க நிலையாகவும் நீர்த்தேக்க குட்டையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது எந்த ஒரு நபருக்கு அனுபவத்தில் இல்லாத இவ்விடத்தில் ஊராட்சி நிர்வாகத்தாலும் ஊரக வளர்ச்சித் துறையிலாலும் இருமுறை செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது இப்பகுதியின் அருகில் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர் இதனை அகற்ற முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்ததன் காரணமாக அதனை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அகற்றப்படுவதற்கான குறிப்பானையும் வட்டாட்சியரால் வழங்கப்பட்டுள்ளது. சிலர் ஆக்கிரமிப்பு செய்யவும் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர் அத்திப்பாடி கிராம சபைக் கூட்டத்தில் இரண்டு முறை இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதிக்கு தற்போது பட்டா கேட்டு விண்ணப்பித்ததன் அடிப்படையில் தற்போது விரைவாக இடமாறுதல் பெறவிருக்கும் வருவாய் கோட்டாட்சியர் நீர்நிலை பகுதிகளை ஆய்வு செய்தார் 50 வருடத்திற்கு மேலாகவும் நீர் நிலையாகவும் தனிநபர் யாருடைய அனுபவத்திலும் இல்லாத இப்பகுதியில் கிராம கணக்கில் தரிசு என குறிப்பிடப்பட்டு உள்ள ஊரக வளர்ச்சித் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பகுதியில் ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியர் பட்டா விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா வழங்குவாரா அல்லது நீர்நிலை பகுதிகளை காப்பாரா வருவாய் கோட்டாட்சியர் என பொதுமக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



