நாகர்கோவில், ஜூலை – 10,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு வட்ட தலைவர் பிரபா குமார் தலைமையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மின்வாரிய பணியாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கிறிஸ்து தாஸ், செந்தில்குமார், குகவேல், மோகன், பெல்பின் ஜேக்கப், கிசிங்கர், பெனடிக்ட், ஜோஸ், சரவணன், முன்னிலையில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜாண் சௌந்தரராஜ், வட்ட செயலாளர் குணசேகரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்
சிபிஐஎம் மாவட்ட செயலாளர் செல்லசாமி ,சி ஐ டி யு மாவட்ட செயலாளர் தங்கமோகன், சி ஐ டி யு முன்னால் வட்ட செயலாளர் செல்வதாஸ்,பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் செயலாளர் ராஜகோபால், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் பிரான்சிஸ், பொருளாளர் சிவதானு, சிஐடியு முன்னாள் மாநில துணைத்தலைவர் செல்லப்பன், போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், கட்டுமான தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் பெருமாள், மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் அந்தோணி, சி ஐ டி யு மாநில குழு உறுப்பினர் இந்திரா, தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கம் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகள் :-
மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கேட்டும், வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற வலியுறுத்தியும்,
மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்பநல நிதி 5 லட்சத்தை மின் வாரியத்திலும் அமல்படுத்திட கேட்டும், மின் விபத்தில் உயிர் இழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூபாய் 10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணை வாரிய உத்தரவு வெளியிட வேண்டியும் , ஊதிய உயர்வு நிலுவைத் தொகை இரண்டாம் தவணையை காலதாமதம் கடத்தாமல் உடனே வழங்கிட கேட்டும், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.