நாகர்கோவில் ஆக 21
குமரி மாவட்டம் மருந்துவாழ்மலையின் உச்சியில் 500 அடி உயரத்தில் பரிதவித்த கேரள வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ் மலை உச்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மலையேறி சென்றுள்ளார். மலையில் 500 அடி உயரத்தில் சென்ற சிவகுமார் மேலே செல்லவும், கீழே இறங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக மருந்துவாழ்மலை அடிவாரத்திற்கு சென்ற பக்தர்கள் அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளனர்.
தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்புத் துறையினர், நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மருந்துவாழ் மலைக்கு வந்து 500 அடிக்கு மேல் மலை உச்சியில் பரிதவித்து வந்தவரை கயிறு போன்ற உபகரணங்களுடன் சென்று பத்திரமாக மலை உச்சியில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.