இவ்விழாவினை தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) சிதம்பரநாதன் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். விழாவில் அப்துல் கலாமின் உறுதிமொழியை மாணவர்கள் அனைவரும் ஏற்றனர். பலர் இந்த அறிவியல் கண்காட்சியில் 295 மாணவர்கள் கலந்து கொண்டு கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விளக்கக்காட்சி, மொபைல் ரோபோக்கள் ஆகிய பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பல்வேறு மன்றத்தின் சார்பாக நிலையான வளர்ச்சி இலக்குகள் என்ற தலைப்பில் செயல்பாடுகள் மூலம் விளக்கினர் மாணவர்களின் பல்வேறு ஓவியங்களும் கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இரண்டாம் நாள் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கானப் பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்ட ரோட்டரி கவர்னர் தினேஷ் பாபு மற்றும் மாவட்ட துணை ரோட்டரி கவர்னர் கண்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினைத் தெரிவித்தார். மேலும் இவ்விழாவில் பள்ளித் தலைவர் பாலு, பள்ளித் தலைமையாசிரியர் பாபு இராதாகிருஷ்ணன், ஸ்பிக் நகர் ரோட்டரி தலைவர் பாலசுப்பிரமணியன் ரோட்டரி செயலர் இராமசுப்பு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.