தஞ்சாவூர், மே 24- .
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதை தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க திராணியற்று வேடிக்கை பார்த்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணத்தில் தனியார் கடையில் பணிபுரிந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், திமுகவின் நிர்வாக சீர்கேட்டிற்கு சாட்சியாக. சிறுமி முதல் முதியோர் வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டி அதிமுக தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி,உதயகுமார் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் வரவேற்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர்கள் ஆர் காந்தி, துரை செந்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி மோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சிவி சேகர், மாநகர செயலாளர் என் எஸ் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை. திருஞானம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் துரை,வீரணன், அம்மா பேரவை இணைச் செயலாளர் அறிவுடை நம்பி, விவசாய பிரிவு செயலாளர் ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் சிங்ஜெகதீசன், மருத்துவ பிரிவு துணைச் செயலாளர் கருணாநிதி மாவட்ட கலவை தலைவர் நாகராஜன் முன்னாள் மேயரும் மாவட்ட இணை செயலாளருமான சாவித்திரி கோபால், துணைச்செயலாளர்கள் வெண்ணிலா பாலை ரவி, மாசிலாமணி, பொருளாளர் அன்புச்செல்வன், பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சாபிகேசன், கோட்டை புண்ணியமூர்த்தி மருத்துவ கல்லூரி மனோகர் கீழவாசல் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின் செல்வராஜ், தங்கதுரை, கோவி தனபால், ஆசைத்தம்பி, ராஜேஷ் கண்ணா, கோவிந்தராஜ், வினோத், பேரூர் செயலாளர்கள் சசிகுமார், ராதாகிருஷ்ணன், மண்டல செயலாளர்திருநீலகண்டன், துணை செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஸ்வரன், மாணவரணி செயலாளர் நாராயணி ஜவகர் சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சங்கர், மாமன்ற 23 வது வார்டு உறுப்பினர் கோபால், முப்பதாவது வார்டு கேசவன், 36 வது வார்டு உறுப்பினர் கண்ணுக்கினியாள், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் சேகர், கும்பகோணம் மாநகர செயலாளர் ராம.ராமநாதன், அம்மா பேரவை துணைச் செயலாளர் அசோக் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் தவமணி, மகளிர் அணி செயலாளர் கவிதா ஸ்ரீதர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜவாங்கீர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச்செயலாளர் சிங் எஸ் ரமேஷ் குமார், மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் நாகத்தி கலியமூர்த்தி, சாமிவேல், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மலை அய்யன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது இப்ராஹிம்,எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜவஹர் பாபு, அம்மா பேரவை துணைத்தலைவர் பாலை .ரவி மற்றும் மாவட்ட பிரிவு நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் ஒன்று நிர்வாகிகள் கிளை செயலாளர் முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உட்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்



