வேலூர்_03
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிறிஸ்டியான் பேட்டை அடுத்த முத்தையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. அவரது மகன் ஆண்ட்ரூஸ் (28). ஆந்திர மாநிலம், பால்னாட்டூர் பகுதியில் உள்ள ஒரு வாட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சுமார் 10 மாதம் ஆகிறது. மனைவி சவிதா வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். சம்பவத்தன்று (01ற்றி:07:2024) காலை 10:00 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம், பால்னாட்டூர் பகுதியில் உள்ள ஒரு வாட்டர் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்யும் ஆண்ட்ரூஸ் வேலை முடிந்ததும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குஅஆ ஆவெடிமருந்து தொழிற்சாலை அருகில் வரும்போது வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆண்ட்ரூஸ் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே 108 அரசு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஆ ஆஅவர்கள் விரைந்து வந்து அவரைள்ளற்ஈ பரிசோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே ஆண்ட்ரூஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.