கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85 சதவீதம் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டதால் அழிவை நோக்கி செல்லும் கிரானைட் மெருகூட்டும் ஆலைகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு:
கிருஷ்ணகிரி அக் 2: கிருஷ்ணகிரி கிரானைட் மற்றும் சிறு,குறு தொழில் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சரயுவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள். அந்த மனுவில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. உலக அளவில் கிரானைட் கற்கள் உற்பத்தி செய்யும் இந்த மாவட்டத்தில், 350 க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இதனை மையமாகக் கொண்டு 500க்கும் மேற்பட்ட கிரானைட் கற்கள் மெருகூட்டும் சிறு குறு தொழிற்சாலைகள் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 85 சதவீதத்திற்கும் மேல் உள்ள கிரானைட் குவாரிகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் கிரானைட் கற்கள் இல்லாமல், மெருகூட்டும் ஆலைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்து கிரானைட் கற்கள் பெறப்பட்டு உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தொழில் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கிகளில் வட்டி விகிதம் உயர்வு, வரலாறு காணாத மின் கட்டணம் உயர்வு, புவியியல் மற்றும் சுரங்க துறையால் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்ட சீனியரேஜ் கட்டணம் உயர்வு, அபரிதமான ஜிஎஸ்டி வரி விதிப்பு, போலி ஜிஎஸ்டி பில் நடமாட்டம், போன்ற காரணங்களால் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளை நழிவுக்கு தள்ளப்பட்டு உள்ளது. புவியியல் மற்றும் சுரங்க துறையால் அதிக விலைக்கு ஏற்றுமதியாகும் கிரானைட் கற்களுக்கும், தரம் குறைந்த விலைக்கு விற்கப்படும் கிரானைட் கற்களுக்கும், தமிழகத்தில் ஒரே மாதிரியான சீனியரேஜ் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, போன்ற மாநிலங்களில் உள் மாவட்டங்களில் இயங்கி வரும் சிறு,குறுதொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த சீனியரேஜ் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதனால் அவர்களுக்கு உள்ளூர் வியாபாரம் எந்த ஒரு தொய்வின்றி நடைபெறுகிறது. இதனால் அந்த மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய கனிம வருவாய் மற்றும் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்போது பெரும்பாலும் கிரானைட் மெருகூட்டும் ஆலைகள் மெல்ல மெல்ல மூடப்பட்டும், வங்கி கடன் செலுத்த முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியாத சூழலுக்கும், ஆலையை மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் வங்கி கடன் செலுத்த முடியாமல் ஆலை உரிமையாளர்கள் கோரிக்கைகளை அரசு பரிசளித்து உரிய நடவடிக்கை எடுத்து நலிவை நோக்கில் செல்லும் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் 2ம்தேதி கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் மற்றும் கிரானைட் ஆலைகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.