விளாத்திகுளம், ஆகஸ்ட் 26 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் கேப்டன் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேமுதிக புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகப்பெருமாள் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் பாணியில் ஜாதி, மத பேதமின்றி ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலை போட்டு சுடச்சுட சுவையான சிக்கன் பிரியாணி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிங்கிலிபட்டி தேமுதிக கிளைச் செயலாளர் சங்கரன், தேமுதிக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வீரோவன், சிங்கிலிபட்டி, கல்குமி தேமுதிக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.



