விளாத்திகுளம், ஆகஸ்ட் 25 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் JSW நிறுவனம் இணைந்து பண்ணைக்குட்டை அமைக்கும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வதித்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, வேளாண்மை துணை இயக்குனர் மோகன்தாஸ் சௌமியன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் அல்லிராணி, வேளாண்மை துணை இயக்குனர் மனோரஞ்சிதம், வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், JSW துணைப் பொது மேலாளர் ராமராஜ், விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, அன்புராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், இம்மானுவேல், நவநீதகண்ணன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, முத்துலட்சுமிஅய்யன் ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்ககள், கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



