கிருஷ்ணகிரி, ஆக. 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் சாப்பரத்தி ஊராட்சி, மோரனஅள்ளி தொடக்கப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மாற்று திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழு மற்றும் நடுத்தர தொழிலாளர் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட 16 துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களைப் பெற்று கணினியில் பதிவு செய்து தகுதியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக அதற்கான ஆணையை சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் கலந்துகொண்டு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்களான சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் எம். மகேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர். காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் எம்.என். சரவணன் மற்றும் சாப்பர்த்தி ஊராட்சி திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர். இந்த முகாமில் சாப்பர்த்தி ஊராட்சி சேர்ந்த மோரனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் தங்களது மனுக்களை கொடுத்து அதற்குரிய தீர்வினை உடனடியாக பெற்றுச் சென்றனர்.



