கோவை, ஆகஸ்ட் 22 –
கோவை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான பிரீமியம் ரியல் எஸ்டேட் நிறுவனமான மகேஷ்வரி குழுமத்தின் ஒரு அங்கமான மகேஷ்வரி டெவலப்பர்ஸ் இந்தியாவின் முதல் முழுமையான தானியங்கி வில்லாக்களான “ஜிவாந்தாவை” கோயம்புத்தூரில் அறிமுகம் செய்துள்ளது.
ஜிவாந்தா, சரவணம்பட்டி மேம்பாலம் அருகே செட்டி தோட்டத்தில் விரைவில் அமையவிருக்கும் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு அருகே அமைந்துள்ளது. இதனைச் சுற்றி பிரபல பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஐடி அலுவலகங்கள், மால்கள் ஓட்டல்கள் அமைந்துள்ளது. இந்த முழுமையான தானியக்க வில்லாக்களை நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. அருண்குமார், செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவரும் ஸ்ரீவாரி பைனான்ஸ் அன்ட் லீசிங் கம்பெனியின் இயக்குனருமான ராஜேஷ் பி லுன்ட், அகில இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரும் டெக்கான் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக பங்குதாரருமான கார்த்திக், கிரெடாய் கோயம்புத்தூர் தலைவர் அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த வில்லாக்கள் ஜிஎஸ்டி கட்டணம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
ஜிவாந்தா அறிமுகம் குறித்து மகேஷ்வரி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நிதின் கார்த்திக் கூறுகையில், இந்தியாவின் முதல் முழுமையான தானியங்கி வில்லாக்களுடன் மகேஷ்வரி டெவலப்பர்ஸ் சர்வதேச தரங்களுக்கு இணையான முன்னோடி மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டுவருகிறது என்று தெரிவித்தார். மகேஷ்வரி குழும நிறுவனர் மற்றும் தலைவர் கார்த்திக் சுந்தரசாமி கூறுகையில், மகேஷ்வரி டெவலப்பர்ஸ் மக்களின் பல்வேறு தேவைகளை மனதில் கொண்டு சிறப்பாக ஜிவாந்தாவை வடிவமைத்துள்ளது. இது அவர்களின் வாழ்நாள் கனவை நனவாக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. இது ரியல் எஸ்டேட் துறையில் மிகுந்த வரவேற்பை பெறும் எனத் தெரிவித்துள்ளார்.



