சங்கரன்கோவில், ஆகஸ்ட் 18 –
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சி நகர் மன்ற தலைவர் தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் ஆறாவது வார்டு கவுன்சிலர் கௌசல்யா வெங்கடேஷ், அதிமுக சார்பில் கவுன்சிலர் அண்ணாமலை புஷ்பம் ஆகியார் போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பில் 22 கவுன்சிலர்கள் திமுக வேட்பாளர் கவுசல்யா வெங்கடேஷ் இவருக்கு வாக்களித்தனர். அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பத்திற்கு 6 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். நகர் மன்ற தலைவர் தேர்வில் திமுக வேட்பாளர் கௌசல்யா வெங்கடேஷ் அமோக வெற்றி பெற்று நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற தலைவருக்கு தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மேளதாளங்கள் முழங்க வெடி வெடித்து சங்கரன்கோவில் நகரில் எம்எல்ஏ ராஜாவுக்கும் நகர்மன்ற தலைவர் கௌசல்யா வெங்கடேஷ்க்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள், உறுப்பினர்கள் புதிய நகர் மன்ற தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



