மார்த்தாண்டம், ஆக. 16 –
திருவட்டார் அருகே பேரை பகுதியை சேர்ந்தவர் சிசிலி (75). அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ் (19) என்ற கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிளில் சம்பவ தினம் திருவட்டாருக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த சிசிலி நிலை தடுமாறு கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்தவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு சிசிலி உயிரிழந்தார். திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் நிதிஷை விசாரித்து வருகின்றனர்.


