திருவெண்ணெய்நல்லூர், ஆக. 12 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஒ அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மேன் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். பி.டி.ஒ. முல்லை ஒன்றிய துணை சேர்மேன் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஒ. பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். அலுவலக கணக்காளர் சிலம்பரசன் தீர்மானம் வாசித்தார். இக்கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் இருந்த மக்களின் குறைகள் குறித்தும் ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரி சதீஷ், மல்லிகா காசிநாதன், தீபா சிவக்குமார், மஞ்சுளா வீரன், சரவணன், சுபாஷ், எழுமலை, சரோஜா குப்புசாமி, மல்லியம்மாள் சேவி, அஞ்சாயிரம் கோவிந்தன், ஜெயராமன், ஜெயந்தி சக்திவேல், முருகன், தனகோட்டி ஸ்ரீதர், வீராசாமி, விஸ்வநாதன், சுகந்தி இராஜீவ்காந்தி, இன்பவள்ளி அய்யனார், நாராயணன், ராஜீவி பழனிவேல் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



