மதுரை, ஆகஸ்ட் 11 –
மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர், மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின்படி அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் நபி தலைமை தாங்கினார். நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன், அல்ஹாஜ் முகமது மற்றும் ஆசிரியர்கள் தமிழ்க்குமரன், நூருல்லாஹ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



