முடிச்சூர், ஆக 4 –
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூரில் தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் இந்திய ராணுவத்தில் ஆஹீர் ரெஜிமெண்ட் யாதவர் பிரிவு அமைக்க கோரி யாதவர்கள் புனித மண் கலச வாகன பேரணியை அனைத்து இந்திய யாதவர் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம்.பி குணா தலைமையில் பி. செந்தில்குமார் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் இந்த பேரணி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக எல்லார் செழியன் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் ஸ்டார் பிரபா, ரங்கா நகர் குணசேகரன், முன்னாள் ராணுவவீரர் விஜயகுமார், தில்லை ராஜ், வழக்கறிஞர் சரவணன், கோபிநாத், பெருங்களத்தூர் தனசேகர், எஸ். சுரேஷ், எம். செந்தில் குமார், எம். மாணிக்கம், ரங்கா நகர் ராஜேந்திரன், மூர்த்தி, ஜெகதீப், தாழம்பூர் ஜெய் கணேஷ், திருப்போரூர் குணா, கண்ணன், எல். பாலாஜி, கார்த்திக், பிரகாஷ், ஹரி விக்னேஷ், சந்தோஷ், வாசுதேவன், மணிகண்டன் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் அதனை தொடர்ந்து முடிச்சூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு தாம்பரம், செம்பகாக்கம், மேடவாக்கம், ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பேரணியாக சென்றனர். இதில் தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்