மார்த்தாண்டம், ஆகஸ்ட் 1 –
கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜேஷ் குமார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எம்பி ஆகியோரை மரியாதை நிறுத்தமாக புதுடெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து கூறியதாகவும், அவற்றை பொறுமையாக கேட்டதாகவும் ராஜேஷ் குமார் எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.