சிவகங்கை, ஆகஸ்ட் 1 –
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டம் உதவிகள் மற்றும் நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய துணைத்தலைவர் செ. கனிமொழி பத்மநாபன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. எஸ். செல்வசுரபி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல மாநில வாரிய உறுப்பினர் சி. மகாலிங்கம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) வி. செலினா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.