திருப்பூர், ஆகஸ்ட் 1 –
அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி நெருப்பெரிச்சல், புதிய பேருந்து நிலைய பகுதி கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மாநகர மாவட்ட செயலாளர் ஜெயராமன் எம்எல்ஏ தலைமையிலும் பகுதி கழக செயலாளர்கள் நாச்சிமுத்து வானவில் கனகராஜ் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகருக்கு வருகை தரும் கழக பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மற்றும் தெருமுனை பிரச்சாரம் மற்றும் பூத் கமிட்டி சரி பார்ப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
உடன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி, திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பட்டு கவுண்டர், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன், பகுதி கழகச் செயலாளர் ஹரிஹரசுதன், விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சீனியம்மாள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இந்திரா ராணி அனந்தன், தமிழ்ச்செல்வி கனகராஜ், எஸ்.எம்.எஸ். துரை, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சொர்க்கம் நீதி ராஜன், வார்டு செயலாளர்கள் செல்வம், இமானுவேல், கோவிந்தராஜ், வாணி டெக்ஸ் கனகராஜ், ரெங்கசாமி, சோமசுந்தரம், காலனி செல்வராஜ், எ.டி காலனி துரை, பெருமாள் மற்றும் சார்பு அணி பங்கேற்றனர்.