திருப்பூர், ஆகஸ்ட் 01 –
கே.வி.ஆர் நகர் கதிரவன் தனியார் பள்ளி முன்பு பள்ளிச் சிறுமி பாலியல் சீண்டல் தொடர்பாக பெற்றோர்கள் போராட்டம் நடத்திய போது செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்த மூத்த பத்திரிகையாளர்களை கள பணிகள் செய்ய விடாமல் அத்துமீறி செல்போன்களை பிடுங்கி, இழுத்து தள்ளி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலிசார் மீது திருப்பூர் காவல் ஆணையரிடம் செய்தியாளர்கள் சார்பில் ஒன்றிணைந்து புகார் மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.