தருமபுரி, ஜூலை 31 –
தருமபுரி மாவட்டம் முக்கனூரில் இரயில் நிலையம் அமைக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மூக்கனூர் ஊராட்சி பகுதி மக்கள் புதிய இடத்தில் இரயில் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் ஆட்சியில் இயங்கி வந்த அதே இடத்தில் இரயில் நிலையம்அமைக்க கோரி மத்திய அரசு, மாநில அரசு துறையின் மூலம் நிலம் எடுப்பு செய்யும் பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்களும் மற்றும் அனைத்து தரப்பு ஊர் பொதுமக்களும் ஒன்று சேர்ந்து மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் செம்மனஅள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், விசிக மைய மாவட்டச் செயலாளர் பாண்டியன் மற்றும் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு இரயில் நிலையம் அதே இடத்தில் அமைக்க கோரி மாற்றி அமைக்காதே! மாற்றி அமைக்காதே! என்ற கோஷங்களை எழுப்பினர். ஏற்கனவே பிரிட்டிஷ் ஆட்சியில் இயங்கி வந்த பழைய இரயில் நிலைய கட்டிடத்தை படத்தில் காணலாம்.