விளாத்திகுளம், ஜூலை 31 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ரூ. 1.83-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) அசோகன், விளாத்திகுளம் சார்பதிவாளர் ஆதிலெட்சுமி, விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள்,
துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.