தருமபுரி, ஜூலை 30 –
தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள், களப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 வயது வரை உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான பல்வேறு அணுகுமுறைகளை செயல்படுத்திய வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை எட்டுவதே இதன் நோக்கமாகும் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் பவித்ரா உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.