சென்னை, ஜூலை 29 –
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பொது மக்களின் பாதுகாப்புக்காக
செக்யூர் கேம் இந்தியா நிறுவனம் இலவச சிசிடிவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் நடைபெற்றது. இத்தொடக்க விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் இயக்கி தொடக்கி வைத்தார். “செக்யூர்கேம் இந்தியா” நிறுவனம் மேற்கொண்ட ‘நமது நகரத்தை பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் சென்னை நகரம் முழுவதும் 10,000 சி.சி.டி.வி கேமராக்களை பொறுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது .
இந்நிகழ்ச்சியின் தொடக்க உரையாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் சிசிடிவி கேமராக்களின் பங்களிப்பை பற்றி செக்யூர் கேம் இந்தியா நிறுவனர் ரிஜோய் தாமஸ் உரையாற்றினார். இவ்விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் கலந்து கொண்டு “நமது நகரத்தை பாதுகாப்போம்” விழிப்புணர்வு பிரசார பயணத்தின் தொடர் வெள்ளி கோப்பையை வளரும் இளம் தலைமுறை மாணவர்களின் கைகளில் வழங்கி சீனிவாசபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க கவர்னருமான எம்.கே. நாராயணன் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் என பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.