திண்டுக்கல், ஜூலை, 29 –
ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேன்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (NIEPMD), திண்டுக்கல் காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மூன்று நாட்கள் (26.07.2025-28.07.2025) தொடர் மறுவாழ்வு பயிற்சி வகுப்பு ஒருங்கிணைந்த கல்வி இந்திய மறுவாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி திண்டுக்கல் – கரூர் சாலை, நந்தவனப்பட்டியில் உள்ள பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேச்சு மற்றும் மொழி திறன் பயிற்சியாளர் டாக்டர் ப. விஜய் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாநகராட்சி முதல் பெண் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் திருவருட் பேரவை இணைச் செயலாளரும், திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் வழக்கறிஞர் M. திபூர்சியஸ், பிரஸித்தி வித்யோதயா டிரஸ்டி S. புருசோத்தமன், மெர்சி பவுண்டேஷன், திண்டுக்கல் ஆதவன் உலகச் செம்மொழித் தமிழ் சங்கம் Dr.A. அருள்மெர்சி செந்தில்குமார், கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் M. வெள்ளிமலை, திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் I. தனராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் M. கதிரவன் (NIEPMD) ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர். தொடர் மறுவாழ்வு பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.