கோவில்பட்டி, ஜூலை 25 –
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள VOC ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக கோவில்பட்டி வட்ட அளவிலான பெண்கள் பங்கு பெறும் ஹாக்கி போட்டி நடைபெற்றது. சுமார் 16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தப் போட்டிக்கும், பள்ளிக்கும் தேவையான விளையாட்டு உபகரணங்களை பள்ளியின் மாணவ மாணவியர்களிடம் வழங்கினார். இந்த போட்டிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாத்தையா முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜன் மற்றும் கயத்தாறு உடற் கல்வி துறை இயக்குனர் ரவீந்திர குமார் ஆகியோர் வரவேற்றனர். VOC பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன், சுடலை, மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளின் விளையாட்டு ஆசிரியர்கள், போட்டிக்கான நடுவர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.