களியக்காவிளை, ஜூலை 22 –
களியக்காவிளை அருகே வாகன விபத்தில் காயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியை சார்ந்தவர் தோமஸ் மகன் சஜு (38). இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் கூலி வேலை செய்து விட்டு படந்தாலுமூட்டில் இருந்து வீட்டிற்கு ரோட்டோரமாக நடந்த சென்று கொண்டு இருந்தார். ஒற்றாமரம் காற்றாடி முட்டில் வைத்து அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது.
இதில் காயம் அடைந்த சஜுவை அப்பகுதியினர் மீட்டு அருகில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிட்சை அளித்துள்ளனர். சிகிட்சை முடிந்து சஜு வீட்டிற்கு திரும்பியுள்ளார். மறுநாள் காலை அவர் அசைவற்று காணப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அவவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளார். இது குறித்து சஜுவின் சகோதரி கல்லியாணி களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.