கோவை, ஜூலை 04 –
கோவை மாவட்டம் இடையர்பாளையம் வார்டு 35 மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ஆ. ரவி திறந்து வைத்தார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்பிரமணியம், இடையர்பாளையம் பகுதி கழக செயலாளர் கா. மதியழகன் வட்டக் கழக செயலாளர் குமரேசன், 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ந. சம்பத், அவைத் தலைவர் சோ. துரை பாண்டியன், வட்ட கழக நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பாக முகவர்கள், மூத்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.