By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது
இராமநாதபுரம்

பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது

Last updated: July 1, 2025 6:25 pm
July 1, 2025
33 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 1 –

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டதுடன் ஆறு நாட்கள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இக்கல்லூரியில் 2025-2026-ம் ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதன்படி பள்ளி பருவம் முடிந்து முதன் முதலாக கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை புரிந்தனர். கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமையில் பேராசிரியர்கள் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் கல்லூரி முதல்வர் ராஜா பேசும்போது, முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் முக்கியம் கொடுக்க வேண்டும். விளையாட்டு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்கல்வியில் தமிழக அரசு வழங்கியுள்ள அனைத்து திட்டங்களும் மாணவ மாணவிகளுக்கு பெற்று தரப்படும். ஒழுக்கத்துடன் கல்வியை பயில வேண்டும் என கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரமக்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதா மற்றும் பரமக்குடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் ரீதியான பிரச்சினைகள், பெண்களின் பாதுகாப்பு, சிகை மற்றும் ஆடைகளை உடுத்த கட்டுப்பாடுகள், ராக்கிங் போன்ற செயலில் ஈடுபடக்கூடாது, மாணவ மாணவிகளுக்கு உள்ள பாதுகாப்புச் சட்டங்கள், உயர்கல்வியின் முக்கியத்துவங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் சிவக்குமார், அறிவழகன், ரேணுகாதேவி, கண்ணன், விஜயகுமார், மும்தாஜ்பேகம், மோகன கிருஷ்ணவேணி, வேலாயுதம், ராமமூர்த்தி, பரமக்குடி நகர் சார்பு ஆய்வாளர் சண்முகவேல் உள்ளிட்ட உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அயோடின் குறித்து உணவு பாதுகாப்பு துறை
சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை
பாம்பன் மீனவன் விசைப்படகில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
டாஸ்மாக் கடையை மூட கோரி பெண்கள் காத்திருப்பு போராட்டம்
ராமநாதசுவாமி கோவில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்கோயம்புத்தூர்மாவட்டம்

பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது

May 23, 2024
103 Views
கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா
குடிப்பழக்கத்தை நிறுத்தியதொழிலாளி திடீர் தற்கொலை
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account