ஈரோடு, ஜூன் 30 –
எஸ் எஸ் எஸ் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மற்றும் அரண் அறக்கட்டளை சார்பில் ஈரோடு திருநகர் காலனி முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் சர்க்கரை உயர் இரத்த அழுத்தம், கண், பல் மற்றும் பொது மருத்துவம் போன்றவைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திருநகர் காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். டாக்டர்கள் சரத், ஜெய் துருவன் விஜய்குமார் மற்றும் பல்வேறு டாக்டர்கள் இதில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரண் அறக்கட்டளை தலைவர் சாகித், செயலாளர் யாசர், பொருளாளர் சாதிக், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஆரிப் மற்றும் இளைய நிலா நண்பர்கள் கிங் நண்பர்கள் செய்திருந்தனர்.