சென்னை, ஜூன் 28 –
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் போதைப் பொருள் விற்பனையாளர் பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் காவல்துறை 25-ம் தேதி சம்மன் அனுப்பியது.
கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கிருஷ்ணா சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். தற்போது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதில் தான் கூடிய நிலையில் நடிகர் கிருஷ்ணா தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் எனக்கு சில உடல் நல கோளாறுகள் உள்ளது. அதன் காரணமாக என்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால் நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் “Code word” ல் தகவல் பரிமாற்றங்கள் இருந்துள்ளது.
அதற்கு என்ன அர்த்தம்? போதைப் பொருள் தொடர்புடையதா என கேட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.