By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூர்

மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு

Last updated: June 21, 2025 1:51 pm
June 21, 2025
25 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 21 –

தஞ்சாவூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்குப் பிறகு கணவனிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழியனுப்பி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி மன நலம் பாதிக்கப்பட்ட 30 வயதான ஒரு பெண் குழந்தையுடன் மீட்கப்பட்டார். அவரை தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர மற்றும் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த பெண் கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தப் பெண்ணுக்கு மாவட்ட மனநல மருத்துவர் சித்ராதேவி பரிந்துரையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்த அந்தப் பெண் நாளடைவில் குணமடைந்து வந்த நிலையில் தனது கணவன் மற்றும் ஊர் பெயரை மருத்துவர்களிடம் இந்தியில் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி பேசத் தெரிந்த ஒருவர் மூலம் அந்த பெண்ணிடம் பேசி தகவல்களை செட் இந்தியா நிர்வாகிகள் சேகரித்தனர்.
அதன் பேரில் அந்த பெண் பீஹார் மாநிலம் நவடா மாவட்டம் கொண்டாப்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண்ணின் பெயர் முன்னி தேவி என்றும் கணவர் பெயர் பிரகாஷ் என்பதும் தெரிய வந்தது. குழந்தை பெயர் சுகானா என்பதும் தெரிய வந்தது. பிரகாஷ் அங்குள்ள மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து பீகார் மாநில போலீஸ் மூலம் முன்னி தேவியின் கணவரைக் கண்டறிந்து அவர் கூறுவது உண்மைதானா என வீடியோ கால் மூலம் பிரகாஷிடம் பேசினர். அப்போது அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு திருமணம் நடந்ததாகவும், முன்னி தேவி மனநலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதற்கு மருந்து சாப்பிட்டு வந்த முன்னி தேவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அவர் மாத்திரைகள் சாப்பிடாமல் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியேறி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் தனது மனைவி தஞ்சாவூரில் இருப்பதை அறிந்த பிரகாஷ் சந்தோஷத்துடன் உறவினர்களுடன் தஞ்சாவூருக்கு வந்தார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் முன்னி தேவி பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது செட் இந்தியா நிர்வாக இயக்குனர் பாத்திமா ராஜ், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர மற்றும் சிகிச்சை மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிசாந்தி 181 ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர் விமலா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் முன்னி தேவிக்கு தொடர் சிகிச்சை, மருந்துகள், ஆடைகள், இனிப்புகள் வழங்கி மாவட்ட கலெக்டர் வழியனுப்பி வைத்தார். தனது மனைவி மற்றும் குழந்தையை 8 மாதங்களுக்குப் பிறகு பார்த்ததும் பிரகாஷ் நெகிழ்ச்சியுட ன் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தனது குழந்தையையும் மனைவியையும் மகிழ்ச்சி பொங்க அழைத்துக்கொண்டு சென்றார். அவருடன் செட் இந்தியா தன்னார்வலர்கள் சென்னை வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 440 மனுக்கள்; உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு
தஞ்சாவூர் கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
ஆட்சிக்கு வந்த பா.ஜ கவை குறைத்து மதிப்பிட முடியாது!
தமிழ் பல்கலைக்கழகத் தில் புத்தொளிப்பயிற்சி தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பாஜ ஆட்சி இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது

April 5, 2025
36 Views
தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த
ஸ்ரீ ஏழுமலையான், ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டுச் சங்கம் சார்பில் முதலாவது பாரா தடகள விளையாட்டு போட்டி
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account