மதுரை ஜூன் 05
மதுரை
எஸ்ஆர்எம் பொறியியல்
மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாணவர்களின் திறமைகள் வெளிப்பட இசை மயமான, உற்சாகம் மிகுந்த “ZURA 2025″ கலாச்சார விழா. SRM குழுமத் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது.
விழாவில் SRMMCET தலைவர் பத்மப்ரியா ரவி, மற்றும் தாளாளர் செல்வி ஹரிணி ரவி ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.துரைராஜ் மற்றும் துணை முதல்வர் டாக்டர் சம்பத் ஆகியோர்
பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.
விழா ஏற்பாடுகளை SRM குழும ஒருங்கிணைப்பாளர்
எம்.மனோகரன் மற்றும் நுண்கலை ஆலோசகர்.
எம். தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறந்த வழிகாட்டுதலடன் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும்
இந்த கலாச்சார விழாவை, நுண்கலைச் செயலாளர் டாக்டர் சபரிநாத் மற்றும் நுண்கலை இணைச் செயலாளர் டாக்டர் அங்கலேஸ்வரி ஆகியோர் மாணவர்களின் பல்துறை திறமைகளை மேடையில் காட்சிப்படுத்தும் விதமாக சீரான திட்டமிடலுடன் விழாவை நடத்தினர்.
இந்த நிகழ்வில்
“கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியின் பிரபலங்களைான அசார் மற்றும் TSK ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் அனைவரையும் மகிழ்வித்தனர்.