நாகர்கோவில் – மே – 28,
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் படி பூதப்பாண்டி வன அலுவலர் ரவீந்திரன் தலைமையில் உடையார் கோணம், தெள்ளாந்தி , ஆரல்வாய்மொழி, பொய்கை அணை ஆகிய வனப் பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து விவசாய விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதபடுத்தாமல் இருக்க பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.