மார்த்தாண்டம், செப். 6 –
மார்த்தாண்டம் அருகே மீன் தொட்டியை சுத்தம் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார். நான்குநேரி பட்டர்புரத்தை சேர்ந்த தர்மசிங் மகன் கோபால் (40). இவர் மார்த்தாண்டத்தில் தனியார் காருக்கு டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கோபால் கல்லுத் தொட்டியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் மீன் வளர்க்கும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த கோபாலை உடனே குழித்துறை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து கோபால் மனைவி முத்துலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


