வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வான 500 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக ஆண்டு தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இறுதியாண்டு படிக்கும்போதே வேலை வாய்ப்பு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பல்வேறு கட்டமாக நடத்தப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி மாணவர்களை தேர்வு செய்தனர்.
அதன்படி டி.சி.எஸ்., விப்ரோ, ஐ.டி.சி., பெரி சாப்ட்வேர்ஸ், அசோக் லேலண்ட், யாமகா உள்ளிட்ட நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்தனர்.
வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் தேர்வாகிய மாணவர்களுக்கு கல்லூரி கலை அரங்கில் “பணி ஆணை வழங்கும் விழா” பெரி கல்வி குழும தலைவர் சரவணன் பெரியசாமி தலைமையில் நடைப்பெற்றது.
பெரி கல்விக் குழும தலைமை இயக்க நிர்வாக அலுவலர் திருமிகு சசி வீரராஜன் மற்றும் பெரி கலை அறிவியல் கல்லூரி கல்வி இயக்குநர் முனைவர் அ.குணசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தனர். பெரி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்கள் வரவேற்று பேசினார்.
இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ZOHO நிறுவனத்தில் மனித வளமேம்பாட்டு பிரிவு தலைவர்
சார்லஸ் காட்வின் மற்றும் சிட்டியுஸ்டெக் நிறுவனத்தின் மனித வள பிரிவு மேலாளர் அபிநயா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்து பணி ஓதுக்கீடு ஆணையை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு முகாம் அலுவலர் B .அருள் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் அ.புருசோத்தம்மன் கூறுகையில், கல்லூரியில் நடைப்பெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து வந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வாகி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்கான ஏற்பாடு செய்த கல்லூரி தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.