வேலூர்_30
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த கருகம்பத்தூர் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருத்தேர் விழாவில் கரக ஊர்வலம், கூழ் ஊற்றுதல், மங்கள மேளம் முழங்க ஸ்ரீ பொன்னியம்மன் திருவீதி உலா, கரகாட்டம் அந்தி தேர் வீதி உலா, பொன்னியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, ஆகிய நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தேர்த்திருவிழா குழு உறுப்பினர்கள் ஜி. ராஜேந்திரன், பி .பாபு என்கிற ஜெயக்குமார், எம் .சுப்பிரமணி ,ஆர். பிரகாசம், எம். ஆனந்தன் ,கே. ராமமூர்த்தி, கே .பொன்னுரங்கம், பி.பன்னீர்செல்வம், பி .வெங்கடேசன், எஸ்.சக்திவேல், எஸ்.கோபிநாத், பி.லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.



