கிருஷ்ணகிரி மே. 14
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி 2022-2023 ஆண்டிற்கான வளர்ச்சி நிதியின் கீழ் அப்போதைய கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் முயற்சியில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டு மக்களுக்கு குடிநீர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர், ஐந்து ரூபாய்க்கு 20 லிட்டர் என்கிற விகிதாச்சாரத்தில் தானியங்கி இயந்திரத்தின் மூலம் குடிநீரை பெற்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சமீப காலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம் பேருந்து நிலைய வியாபாரிகளால் உடைக்கப்பட்டு தற்பொழுது செயலற்று உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் குடிநீர் கிடைக்காமல் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது.
எனவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்த தானியங்கி சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் தற்போது உடைக்கப்பட்டு சேதம் அடைந்து காணப்படுகிறது.
இதனை சமூக ஆர்வலரும் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் டாக்டர் சந்திரமோகன் அவர்கள் நூதன முறையில் உடலில் காலி குடிநீர் பாட்டில்களை கழுத்தில் மாட்டிக் கொண்டு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பார்வையிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் சந்திரமோகன் அவர்கள் பேசுகையில், கிருஷ்ணகிரி ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி சென்று வருகின்றனர். இவர்கள் அன்றாடம் இந்த தானியங்கி குடிநீர் இயந்திரத்தை பயன்படுத்தி குடிநீரை எடுத்துச் சென்று இருந்த நிலையில் தற்பொழுது சேதம் அடைந்து பாலடைந்த நிலையில் பரிதாபத்துக்குரிய வகையில் அந்த குடிநீர் நிலையம் காணப்படுகிறது.
இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இது நாள் வரை எடுக்கப்படவில்லை எனவே மக்கள் நலன் கருதி.
மனிதநேயமிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக இதன் மீது கவனத்தை செலுத்தி தானியங்கி குடிநீர் நிலையத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு டாக்டர் சந்திரமோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.