கிருஷ்ணகிரி மே. 13
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.இ.எல்.சி மான்ஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான மாணவியர் விடுதியில் தெய்வத்திரு ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் இன்று மதியம் உணவளிக்கப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிகையாளர் மற்றும் ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வசந்தகுமார் அவர்கள் தலைமையில் தனது மாமாவின் நினைவு தினத்தில் மன வளர்ச்சி குன்றியோருக்காக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
இதில் தோழர் கௌதம் ஐயா சங்கர் மற்றும் தம்பி பழனிச்சாமி பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் முதல்வர், தலைமை ஆசிரியர் என அனைவரும் கலந்து கொண்டு மத்திய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.