தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் கட்சி சார்பாக பட்டியல் வெளியேற்றமும் தனி இட ஒதுக்கீடு கோரியும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வங்கு வாரிய சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரியும் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி திண்டுக்கல் கோபால்பட்டியில் உள்ள இமானுவேல் சேகரன் திடலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சமுதாய போராளி எம்.கே. விஷ்ணு முருகேச பாண்டியனார் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் டி. அழகர்சாமி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பழனி பாபா மாணவியும், தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சியின் மாநில பொருளாளருமான சாகின்பாத்திமா கலந்து கொண்டு பேசியதாவது, ஓட்டு கேட்டு வரங்களா எந்த கவுன்சிலர், எந்த எம்எல்ஏ, எந்த எம்பி வந்தாலும் பேப்பர் எடுத்து வைங்க என்னென்ன செய்றீங்க என்று வாக்கு கொடுக்கீறீர்கள்.அதை நீங்கள் எழுதிக் கொடுங்க அப்புறம் நீங்க தேர்தலில் நில்லுங்க. அப்புறம் நாங்க ஓட்டு போடறோம் என்று சொல்லுங்கள். ஒருமுறை இஸ்லாமியர்களை சிறுபான்மை என்றும், மறுமுறை தேவேந்திர குல சமுதாயத்தை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வார்கள். எங்கள் அத்தா பழனி பாபா சொன்னது தான் அடுத்த முறை சிறுபான்மை என்று சொன்னால் செருப்பை கழற்றி அடிப்பேன். நாங்கள் யாரும் சிறுபான்மை கிடையாது. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் கிடையாது. நாங்கள் இறங்கி விவசாயத்தில் கால் வைத்தால் தான் நீங்கள் சாப்பாட்டில் கை வைக்க முடியும். தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு நான் கடைசிவரை கூடவே இருப்பேன். இஸ்லாமியர்களும், தேவேந்திர குல வேளாளர்களும் தொப்புள் கொடி உறவுகள் என்று எல்லா இடத்திலும் நான் சொல்லுவேன். கத்தி முனையை விட பேனா முனை சிறந்தது. சட்டை பையில் பேனாவை கண்டிப்பாக இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் அதுவரை தொடர்ந்து போராடுவோம். அதே போன்று தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கட்சியின் சார்பாக பட்டியல் வெளியேற்றமும் தனி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். நான் சொல்வது ஒன்றுதான் வாதங்கள் இல்லை தீர்ப்பு மட்டுமே. நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் வென்று முடிப்போம் என பேசினார். இந்நிகழ்வில் தேவேந்திர குல வேளாளர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வெ.சாமிநாதன்ஜீ, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.சேவுகரத்தினம், எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் என். அபுதாகீர், எஸ்டிபிஐ கட்சியின் நத்தம் தொகுதி தலைவர் ஓ.சாதிக்அலி, தொகுதி துணைத் தலைவர் எஸ்.பகதூர், தொகுதி செயலாளர் அபூபக்கர் சித்திக், தொகுதி துணை செயலாளர் தஸ்லீம் , தொகுதி பொருளாளர் ஷேக் ஒலிஇமாம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



