திருப்பூர்,மே.5-
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக, கோல்டன் நகர் பகுதி 33-வது வார்டு கட்டபொம்மன் சிலை அருகில் 10 ஆண்டுகால அதிமுக., ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்ற ப்பட்ட சாதனை திட்டங்களையும், திமுக.. அரசு பதவி ஏற்ற இந்த 4 – ஆண்டுகளில் பொது மக்கள், விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை விளக்கும் தெருமுனை பிரசாரக் கூட்டம், துண்டு
பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார்
எம். எல்.ஏ,திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளரு மான சு.குணசேகரன் ஆகியோர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சாதனை விளக்கநோட்டீஸ் வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ்
லோகநாதன் தலைமை தாங்கினார்.
கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார்.
மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்து கிருஷ்ணன் வரவேற்புரை யாற்றினார். தனபால் நன்றியுரையா ற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாவட்ட துணைச்செயலாளர் பூலுவ பட்டி பாலு, பொதுக்குழு உறுப்பினர்கள் முருகசாமி, தம்பி மனோகரன், அம்மா பேரவை துணைச் செயலாளர் நீதி ராஜன், பகுதி செயலாளர்கள் பி.கே. எம்.முத்து, நாச்சிமுத்து, வானவில் கனகராஜ், சிவளா தினேஷ், விவசாய அணி செயலாளர்கோபால்சாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி, இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், நிர்வாகிகள் தாமோதரன், ஆண்டவர் பழனிச்சாமி, விஸ்வநாதன், தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.