தென்தாமரைகுளம்., ஏப். 29.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முதல் நிலை பேரூராட்சி சரவணந்தேரி ஊரில் உள்ள விளக்கனார் குளத்தில் இருந்து இரண்டு ஊர்மக்களுக்கு குடிநீருக்கு பயன்படும் வகையில் கிணறு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கிணறு நாளடைவில் மண் சரிந்து பழுதடைந்ததால் ஊர் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் சீர்செய்து தருமாறு கோரிக்கை மனு அளித்திருந்தனர், இந்த கோரிக்கையை ஏற்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்து பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர்
கிணற்றை நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, கவுன்சிலர்கள் குறமகள், பிரபா, ஆதிலிங்கபெருமாள்,. அகஸ்தீஸ்வரம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், வர்த்தக காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு துறை பிரிவு மாவட்ட தலைவர் அருண், ஊர் தலைவர் சிவபெருமாள் மற்றும் கிங்ஸ்லின், விக்ரமராஜ், கன்னியாகுமரி தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.