சுசீந்திரம்.ஏப்.24
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேலைகள் துவக்கம்
குமரி மாவட்டம் தேரூர் கிராமத்தில் அமைந்துள்ள இளைய நயினார் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள்மேல் பழமையான கோவில். இந்த கோயிலில் கடந்த 2 மாதங்கள் முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது, கும்பாபிஷேக திருப் பணிகளில் ஒன்றான தரை தளம், சுற்றுச்சுவர், பழமை மாறாமல் கோயில் சுற்று கற்களை பிரித்து ஒன்றிணைத்தல் அமைக்கும் பணிகள் உபயதாரர்கள் மூலம் ரூ. 25 லட்சம் செலவில் செய்யப்படுகிறது. இதற்கான, துவக்க விழா பூமி பூஜை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இணை ஆணையர் பழனி குமார் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீ காரியம் கண்ணன் உட்பட அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.