வேலூர், ஏப்:21
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் செதுவாலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரவர் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசியாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் இரத்தினகிரி அருள்மிகு பாலமுருகனடிமை சுவாமிகள் விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் கும்பாபிஷேக விழாவில் கோ பூஜை யாகசாலை பூஜை கலசம் புறப்படுதல் விமான கோபுரம் கலசத்திற்கு கும்பாபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் ,மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் மு. பாபு , மற்றும் செதுவாலை கிராம பொதுமக்கள் ,விழா குழுவினர்கள், இளைஞர்கள் ,பலர் கலந்து கொண்டனர் .