முதுகுளத்தூர் ஏப்ரல் 18
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் செயல்பட்டுவரும் முத்தமிழ் அறக்கட்டளை முத்தமிழ் தர்மசாலை மூலம் தினந்தோறும் ஊனமுற்றோர் வயதான முதியோர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.
தற்போது முதுகுளத்தூர் வட்டம் இளஞ்செம்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறப்பு வகுப்பின் போது மதிய உணவிற்காக பள்ளி ஆசிரியர் பழனி ஆண்டவர் முத்தமிழ் அறக்கட்டளையின் சார்பில் இரண்டு நாளைக்கு மதிய உணவு வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்கள் மதிய உணவு வழங்கினார்கள் .இந்த மதிய உணவு ஏற்பாடு செய்த முத்தமிழ் அறக்கட்டளைக்கு மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள் ,மற்றும் கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



