தென்காசி ஏப் 7
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதை செய்யும் வகையில் நகரமன்ற தீர்மானம் நிறைவேற்றிய கடையநல்லூர் நகராட்சியிடம் அறிக்கை கேட்டு தமிழ்நாடு உள்ளாட்சி முறை மன்ற நடுவம் உத்தரவிட்ட உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கடையநல்லூர் நகர மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படத்தை வைக்க கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தின் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி நகராட்சி கூட்டம் முடிந்த பின்னர் கூட்ட அரங்கில் மாண்புமிகு பிரதமர் படம் வைக்கப்பட்டது ஆனால் எந்த காரணமும் இன்றி எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வைத்த சில மணி நேரங்களிலேயே பிரதமரின் படம் அகற்றப்பட்டது இச்செயல் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து பாஜக நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் காவல்துறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் முறையாக இதுகுறித்து புகார் அளித்த அளிக்கப்பட்டது ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் எடுக்கவில்லை பிரதமர் படம் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றி ஆறு மாதங்கள் ஆகிவிட்டதால் அது காலாவதி ஆகிவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது ஆனால் ஆறு மாதத்தில் தீர்மானம் காலாவதி ஆகிவிடும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் குறிப்பிட்டபடி நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ வேண்டுமென்றால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்று மாதத்திற்குள் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடத்தி மாற்றவோ ரத்து செய்யவோ செய்யலாம் மூன்று மாதத்திற்கு பின்பு நகராட்சி நிர்வாக இயக்குனரின் முன் அனுமதியின்றி தீர்மானத்தை மாற்றவோ ரத்து செய்யவோ இயலாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் அரசின் விதிகளை மீறி அகற்றப்பட்ட மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படத்தை வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கடையநல்லூர் நகர மன்றத்தில் ஒரு தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது கடையநல்லூர் 13– வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திவான் மைதீன் என்பவரால் கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானத்தில் கடையநல்லூர் நகர்மன்றத்தில் ((தீர்மான எண் 283 நாள்
04-01-2023) மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் திரு உருவ படத்தை வைக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய கோரப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகின்றது இந்த தீர்மானம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது திட்டமிட்டு பாரதப் பிரதமரை அவமானப்படுத்தும் வகையிலும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இது அமைந்துள்ளது நகரமன்றத்தில் பாரத பிரதமர் உருவப்படம் இடம் பெறுவதால் நகரின் நலன் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது என தெரியவில்லை இது பிரதமரையே இழிவுபடுத்தும் செயலாகத்தான் கருத வேண்டி இருக்கிறது எனவே கடையநல்லூர் நகராட்சி நிர்வாகத்தில் விளக்கம் கேட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர் கணபதி பாலசுப்ரமணியம் என்பவர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தார் நகரமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் பாராளுமன்றம் சட்டமன்றம் ஆகியவற்றில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு இணையான சட்டப்படியான ஒரு ஆவணம் என்பதால் தாங்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார் ஆனால் மாவட்ட நிர்வாகம் அதை வழக்கம் போல் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பியது.நகராட்சி நிர்வாகம் நகரமன்ற கூட்டரங்கில் தலைவர்கள் மற்றும் பாரதப் பிரதமர் உருவப்படங்களை வைப்பது நகர் மன்றத்தின் முடிவு என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது என்று சம்பிரதாயமாக பதிலளிக்கப்பட்டுள்ளது பாரதப் பிரதமர்களின் உருவப்படத்தை வைக்க முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு படம் வைக்கப்பட்டு அதை சில மணி நேரங்களில் அகற்றப்பட்டு தீர்மானத்தை சட்டப்படி ரத்து செய்யாமல் அவரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்த கொண்டது குறித்து மாவட்ட கலெக்டர் முறையாக விசாரிக்காமல் மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு போஸ்ட் ஆபீஸ் மூலம் தபால் அனுப்பியது போல அனுப்பியது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதைத்தொடர்ந்து இது குறித்து உள்ளாட்சிகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்கும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது பாரதப் பிரதமர் புகைப்படம் குறித்து அறிக்கையை அனுப்புமாறு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் கடையநல்லூர் நகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவர் விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்பதால் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் நகராட்சி அதிகாரிகள் பெரும் கலக்கத்தில் அதிர்ச்சி அடைந்து காணப்படுகின்றனர்..
கடையநல்லூர் பிரதமர் மோடி படம் அகற்றம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics